இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண் நளினி
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் (Lok sabha election) வாக்களித்த முதலாவது இலங்கை பெண் என்ற பெருமையை தமிழ்நாடு (Tamilnadu) - திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினி பெற்றுள்ளார்.
நளினிக்கு முதன்முறையாக வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அன்னை ஆசிரமம் எம்எம் நடுநிலைப்பள்ளியில் அவர் தனது முதல் வாக்கினைச் செலுத்தியுள்ளார்.
வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள நளினி,
மக்கள் மன உளைச்சல்
மாவட்ட நிர்வாகத்தால் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை கண்காணிப்புடன் வைத்திருப்பார்கள்.

அதனால் இங்குள்ள மக்கள் மன உளைச்சலில் தான் உள்ளனர்.
எங்களை இலங்கைத் தமிழர் என்று தெரிவிப்பதை விட, இந்திய வம்சாவளியினர் என்று அதிகாரிகள் அடையாளப்படுத்த வேண்டும் என்று தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களுக்கான பிறப்புச் சான்றிதழில் இந்தியத் தமிழர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
இலங்கையில் வழங்கப்படும் அடையாள அட்டையில், இந்தியர் என்பதற்காக எக்ஸ் என்றும் குறிப்பிட்டிருப்பார்கள்.
40 ஆண்டுகள் உரிமை போராட்டம்
அதனால் அங்கு வாக்குரிமை இல்லாத நிலையில், இங்கு வந்து 40 ஆண்டுகள் ஆகியும் அந்த உரிமை இல்லாமல் முடங்கி கிடந்தோம். அதில் எனக்கு மட்டும் வாக்குரிமை கிடைத்துள்ளது.
முகாமில் உள்ள அனைவருக்கும் இந்திய குடியுரிமை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் இருக்கிறோம்.
மத்திய அரசும், மாநில அரசும் எங்கள் எதிர்பார்ப்பை கவனத்தில் கொண்டு குடியுரிமை வழங்க வேண்டும். தற்போது அரசு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியால், முதல் முறையாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் எனக்கு வாக்குரிமை கிடைத்துள்ளது என கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் நளினி இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam