கொழும்பில் இடம்பெறவுள்ள இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி
புதிய இணைப்பு
கொழும்பில் பிரம்மாண்டமாக இடம்பெறவுள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் என்றும் ராஜா ராஜா தான் இசை நிகழ்ச்சிக்காக நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (20.4.2024) மாலை 6.30 அளவில் இந்த இசை நிகழ்ச்சி கோலாகலமாக ஆரம்பமாகி இன்றும் நாளையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பாடகர்களான மனோ, மதுபாலகிருஸ்ணன், ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பிக்கவுள்ளனர்.
சுமார் 30 ஆண்டுகளின் பின்னர் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில் மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளது.
முதலாம் இணைப்பு
தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா (Ilaiyaraaja) இலங்கையை வந்தடைந்துள்ளார்
இசைஞானி இளையராஜா கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் இன்று (19.4.2024) நாட்டை வந்தடைந்துள்ளார்.
மாபெரும் இசை நிகழ்ச்சி
கொழும்பில் நாளை (20) மற்றும் நாளை மறுதினம் (21) இடம்பெறவுள்ள மாபெரும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
முன்னதாக குறித்த இசை நிகழ்ச்சி கடந்த ஜனவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தது.
எனினும், இளையராஜாவின் (Ilaiyaraaja) "என்றும் ராஜா ராஜாதான் " இசை நிகழ்ச்சி, அவரது புதல்வி பாவதாரணியின் திடீர் மறைவு காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
