உச்சக்கட்ட பதற்றம் - இஸ்ரேல் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ஈரான்
ஈரானின் (Iran) இஸ்பஹானில் (Isfahan) உள்ள அணுமின் நிலையங்கள் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதட்டம் அதிகரித்து வருகின்றது.
ஈரானின் இஸ்பஹான் (Isfahan) நகரின் வடகிழக்கே ஈரானிய இராணுவ விமான தளத்திற்கு அருகே மூன்று ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தாக்குதல் சம்பவம் குறித்து ஈரானிய தளபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஈரானியர்களைத் தூண்டிவிடுமா இல்லையா
இராணுவ விமான தளத்திலுள்ள சில பொருட்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதும், எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் ஈரானிய தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் ஈரானியர்களைத் தூண்டிவிடுமா இல்லையா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, "ஈரானின் பதிலை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறீர்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதல், முன்னும் பின்னுமாக அச்சுறுத்தல்களுக்கு இப்போதைக்கு முடிவாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இஸ்ரேலினுடைய ஆணுவாயுத நிலைகள் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளும் என்று ஈரானினது (Islamic Revolutionary Guard Corps) இன் பிரதான இராணுவத் தளபதி (Brigadier General Ahmad Haghtala) நேற்றைய தினம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.