இந்திய தேர்தல் வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு - மணிப்பூரில் பதற்றம்

Rahul Gandhi BJP Narendra Modi India
By Thulsi Apr 19, 2024 08:27 AM GMT
Report

புதிய இணைப்பு

இந்தியாவின் (India) மணிப்பூர் (Manipur) வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (19) காலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வரிசையில் நின்ற வாக்களர்களிடையே வன்முறை ஏற்பட்டுள்ளது.

இதில் தமன்போக்பி வாக்குச்சாவடியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்திய தேர்தல் வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு - மணிப்பூரில் பதற்றம் | India Lok Sabha Elections 2024 To Begin Tomorrow

எனினும், இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலாம் இணைப்பு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் (Election) நடவடிக்கையாக கருதப்படும் இந்திய பொதுத்தேர்தல் ஆரம்பமாகவுள்ளது.

543 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று (19.4.2024) பொதுத் தேர்தல் (Election) நடைபெறவுள்ளதுடன் இரண்டரை மாதங்களுக்கு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

அத்துடன் ஜூன் 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியிடப்படும் என இந்திய தேர்தல் (Indian election) ஆணையம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளில் இலங்கையருக்கு கிடைத்த உயர் பதவி

ஐக்கிய நாடுகளில் இலங்கையருக்கு கிடைத்த உயர் பதவி

தேர்தல்கள் ஆணைக்குழு

பொதுத் தேர்தலையொட்டி இந்தியா முழுவதும் ஒரு மில்லியன் வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதுடன்15 மில்லியன் தேர்தல் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெளிவுபடுத்தியுள்ளது.

இந்திய தேர்தல் வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு - மணிப்பூரில் பதற்றம் | India Lok Sabha Elections 2024 To Begin Tomorrow

இந்திய நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை (லொக்சபா) மற்றும் மேல் சபை (ராஜ்யசபா) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

முதல் கட்ட தேர்தல் இன்று (19.4.2024) , 2ஆவது கட்டம் ஏப்ரல் 26ஆம் திகதியும், மூன்றாம் கட்டம் மே 7ஆம் திகதியும், நான்காம் கட்டம் மே 13ஆம் திகதியும், ஐந்தாம் கட்டம் மே 20ஆம் திகதியும், ஆறாம் கட்டம் மே 25ஆம் திகதியும், ஏழாவது கட்டம் ஜூன் 1ஆம் திகதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கனடாவை அதிர வைத்த கொள்ளை: தமிழர் உட்பட அறுவர் அதிரடி கைது

கனடாவை அதிர வைத்த கொள்ளை: தமிழர் உட்பட அறுவர் அதிரடி கைது

970 மில்லியன் மக்கள் வாக்களிக்க பதிவு

இந்தநிலையில் ஜூன் 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் இந்த பொதுத் தேர்தலில் 970 மில்லியன் மக்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு - மணிப்பூரில் பதற்றம் | India Lok Sabha Elections 2024 To Begin Tomorrow

நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு (Inida) வலுவான தலைமையை வழங்கி வரும்நிலையில் மோடியின் பாஜக தங்களுக்கு நட்பான அரசியல் கட்சிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்துள்ளது. 

இந்தப் பொதுத் தேர்தலில் மோடியின் பாஜக தனித்து 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். ஒட்டுமொத்தமாக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்று இந்திய அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளில் இலங்கையருக்கு கிடைத்த உயர் பதவி

ஐக்கிய நாடுகளில் இலங்கையருக்கு கிடைத்த உயர் பதவி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US