சட்ட வரைவில் கையொப்பமிடாத சபாநாயகர்: நாடாளுமன்றில் குற்றச்சாட்டு
நாட்டில் அதிக அளவு பணம் அச்சிடப்படுவதாக காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று(07.09.2023) கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய வங்கி உத்தேச சட்ட வரைவில் சபாநாயகர் கையொப்பமிடாத காரணத்தினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட வரைவு திருத்தங்கள்
இந்நிலையில், இந்த சட்ட வரைவு தொடர்பிலான சில திருத்தங்கள் காணப்படுவதனால் இன்னும் கையொப்பமிடவில்லை என சபாநாயகர் பதிலளித்துள்ளார்.
எனினும் இந்த சட்டம் நிறைவேற்றப்படாத காரணத்தினால் பணம் அதிக அளவில் அச்சிடப்படுவதாகவும் இது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆரோக்கியமானது அல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர வீரக்கொடி தெரிவித்துள்ளார்.



