இலங்கைப் பெண்ணின் மோசடியை 33 வருடங்களின் பின் கண்டுபிடித்த குவைத்
குவைட் நாட்டில், இலங்கைப் பெண் ஒருவர் போலி கர்ப்பம், ஆள்மாறாட்டம் மற்றும் தவறான தகவல்கள் மூலம் குவைட் குடியுரிமையை மோசடியாக பெற்றதை அதிகாரிகளால் 33 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொஸ்தா எனப்படும் குறித்த பெண், 1992இல் வீட்டுப் பணியாளராக குவைட்டில் பணிபுரிந்து, 1994ல் நாடு கடத்தப்பட்டார்.
1996இல் புதிய அடையாளத்தில் திரும்பி வந்து, குவைட் நாட்டவரான டாக்ஸி ஓட்டுநரை திருமணம் செய்தார்.
சட்ட நடவடிக்கை
அவர் கர்ப்பமாக இருப்பதாக பொய் கூறி, மற்றொரு இலங்கை பெண்ணின் குழந்தையை தன்னுடையதென பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, அந்நாட்டின் சட்டத்தின் பிரகாரம் 2000 ஆம் ஆண்டில் குடியுரிமை பெற்ற இவர், 2008இல் விவாகரத்து பெற்றார்.
அதன்போது அவர் உண்மையை கூறியிருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குடியுரிமை ரத்து
2021 ஆம் ஆண்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மரபணு சோதனை மூலம் அந்த குழந்தையுடன் இருவருக்கும் தொடர்பில்லையென உறுதி செய்யப்பட்டது.
2024 ஆம் ஆண்டில் கொஸ்தா மற்றும் அவரது வளர்ப்பு மகளின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து, குவைட்டில் குடியுரிமை மறுபரிசீலனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



