கத்தாரில் சிறையில் இருந்த 20 இலங்கையர்கள் விடுதலை
கத்தார் நாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டமை சம்பந்தமாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த 20 இலங்கையர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது.
சிறைத் தண்டனையிலும் இருந்தும் அந்நாட்டு நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டிய அபராதங்களை செலுத்துவதில் இருந்தும் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கத்தார் நாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில், குற்றச் செயல்கள் தொடர்பான சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை கத்தார் அரசு புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு விடுதலை செய்ய தீர்மானித்திருந்தது.
கத்தார் மன்னர் சேய்க் தமீம் பின் அஹமட் அல் தானி, புனித ரமழான் மாத்தை முன்னிட்டு அரச மரியாதை பல நாடுகளை சேர்ந்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri