எதிர்வரும் அக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல்: அகிலவிராஜ் காரியவசம்
எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக எமது கட்சியின் தலைவரான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்குவார் என அகிலவிராஜ் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத் தேர்தல்
இம்மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது என்ற தகவலில் உண்மை இல்லை.

மேலும், முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படவுள்ளது என்றும், அதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan