பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் இறுதி சுற்றுக்கு இலங்கை வீரர் தெரிவு
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு பேர்மிங்காமில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் யுபுன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இலங்கை நேரப்படி புதன்கிழமை (03) இரவு 11.40 மணிக்கு நடைபெற்ற மூன்றாவது அரையிறுதிப் போட்டியில் 10.20 வினாடிகளில் கடந்து நான்காவது இடத்தைப் பிடித்த 27 வயதான ஓட்டப்பந்தய வீரர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

இறுதிப்போட்டிகள்
கென்யாவின் ஃபெர்டினாண்ட் ஓமன்யாலா (10.02), தென்னாப்பிரிக்காவின் அகானி சிம்பைன் (10.07), இங்கிலாந்தின் நெதனீல் மிட்செல்-பிளேக் (10.13), கெமரூனின் இம்மானுவேல் எஸேம் (10.14), வேல்ஸின் ஜெர்மியா அசு (10.15), அவுஸ்திரேலியாவின் ரோஹன் பிரவுனிங்17 (10.15), ரோஹன் பிரவுனிங்.7 (10.18) ஆகியோரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இறுதிப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2.00 மணிக்கு நடைபெறும். நேற்று செவ்வாய்க்கிழமை (02), அபேகோன் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஆடவர் நிகழ்வின் முதல் சுற்றின் எண் 06 இல் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.
ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதிப் போட்டிக்கு அவர் 10.06 வினாடிகளில் ஓடித் தகுதி பெற்றார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan