போராட்டக்காரர்களுக்கு அஞ்சி மாற்று வழியால் தப்பித்த ரணில்! மட்டக்களப்பில் சம்பவம் - செய்திகளின் தொகுப்பு
மட்டக்களப்பில் பாடசாலை நிகழ்வொன்றிற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு அஞ்சி பிரதான வீதி ஊடாக செல்லாமல் மாற்று வழி ஊடாக சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பிற்கு வருகைதந்த ஜனாதிபதி நேற்றும் இன்றும் மட்டக்களப்பு பாசிக்குடாவில் தங்கியிருந்து இரண்டு பாடசாலை நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை காணிகள் பெரும்பான்மை சிங்களவர்களினால் அபகரிக்கப்படுவதற்கு எதிராக கடந்த 23 நாட்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராடி வருகின்றனர்.
இதன் போது மட்டக்களப்பு பாடசாலை ஒன்றிற்கு நேற்றைய தினம் (07) ஜனாதிபதி வருகை தந்துள்ளார்.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
பல பொலிஸ் நிலையங்களிலிருந்து பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸார் அத்தியட்சகர் உட்பட பெருமளவான காவல் அதிகாரிகளும் வருகைதந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
