தமிழக எல்லைப் பகுதியில் வெடிவிபத்து: தமிழர்கள் 13 பேர் உயிரிழப்பு (Video)
தமிழக எல்லை அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் தமிழர்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூர் நகர்ப்புற மாவட்டம் கர்நாடக - தமிழக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு களஞ்சியத்தில் நேற்று (7.10.2023) மாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
வாகனத்தில் இருந்து பட்டாசு பெட்டிகளை இறக்கிக்கொண்டிருக்கும் போதே இந்த எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது.
9 தீயணைப்பு வாகனங்கள்
9 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராடிய நிலையில், தீபாவளி பண்டிகைக்காக களஞ்சியத்தில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் தீ விபத்து கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
A firecracker godown was gutted and some adjoining shops and nine vehicles near it were damaged when an accidental fire broke out at the godown at Attibele-Hosur border while unloading cracker cartons. Know more: https://t.co/LHNa7PklEa
— The Hindu-Bengaluru (@THBengaluru) October 7, 2023
Video: Special Arrangement pic.twitter.com/toea18IIa0
இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த துணை துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார், பெங்களூர் அருகே பட்டாசு வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.