முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்தவாரம் கடையடைப்பு(Video)
முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு - கிழக்கில் அடுத்தவாரம் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து 7 தமிழ் தேசிய கட்சிகள் இன்றைய தினம் ஒன்றுகூடி ஆராய்ந்தனர்.
திகதி பின்னர் அறிவிக்கப்படும்
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே கடையடைப்பு போராட்டம் தொடர்பான அறிவிப்பினை அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன், சித்தார்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறீகாந்தா வடமாகணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன் மற்றும் தியாகராஜா நிரோஷ், மாவை சேனாதிராஜா, கலையமுதன் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின் அடுத்த வாரம் கடையடைப்பு நடவடிக்கை தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடையடைப்பு போராட்டத்திற்கான திகதி சில தினங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
