வெளிநாட்டவரின் உயிரை காப்பாற்ற இலங்கை இளைஞர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்! குவியும் பாராட்டு
இலங்கையை சேர்ந்த இளைஞர் குழுவொன்று கொரிய பிரஜை ஒருவரின் உயிரை காப்பாற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இலங்கையை சேர்ந்த இளைஞர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் போட்டியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொரியாவில் பணிபுரியும் இலங்கையர் ஒருவரின் சிகிச்சைக்காக பணம் திரட்டும் நோக்கில் கிரிக்கெட் போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையர்களுக்கு குவியும் பாராட்டு
தென்கொரியாவின் நோக்ஸான் மைதானத்தில் இலங்கை தொழிலாளர்கள் ஏற்பாடு செய்திருந்த போட்டியின் போது, அருகில் நின்ற லொறியில் கைத்தொழில் வேலைக்காக வந்த கொரியர் ஒருவரின் தலை திடீரென லொறியின் முன்பகுதியில் சிக்கியுள்ளது.
இதன்போது விரைந்து செயற்பட்ட இலங்கையர்கள், கொரிய அவசர சேவையுடன் இணைந்து விபத்தில் சிக்கிய கொரியரின் உயிரை காப்பாற்ற பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதைக் காட்டும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றது.
இவ்வாறு கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் கொரிய பிரஜையை மீட்ட இலங்கையர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




