எரிபொருள் நெருக்கடி: பயண முறைகளை மாற்றும் இலங்கையர்கள்
இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையர்கள் சிலர் தமது அன்றாட போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பழைய பயண முறைகளை நாடியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் ஒருவர் தனது குதிரை வண்டியில் பயணி ஒருவருடன் சவாரி செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பழைய பயண முறைகள்
அதே நேரத்தில் மூதூரைச் சேர்ந்த ஒருவர் சைக்கிள் ரிக்ஷாவில் பயணி ஒருவருடன் பயணிக்கும் மற்றொரு புகைப்படமும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.

இது பழைய போக்குவரத்து முறை என்று நம்பப்பட்டாலும், டாக்கா மற்றும் புது டில்லி போன்ற பிராந்தியத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சைக்கிள் ரிக்ஷாக்கள் ஒரு பொதுவான மற்றும் மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகும்.
இலங்கை தற்போது மிக மோசமான எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன், நாடு முழுவதும் எரிபொருள் வரிசைகள் நீண்டு செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் குடும்பம் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மாவுக்கு நேர்ந்த கதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் போட்டோ Cineulagam