இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ள இலங்கையின் கிரிக்கெட் பிரபலம்
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வரும் இந்திய அரசுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அதிருப்தி அளிக்கின்றது. இலங்கைக்கு 40 ஆயிரம் டொன் டீசலை சமீபத்தில் கப்பல் மூலம் அனுப்பியமைக்கும், இதேபோல அரிசியும் அனுப்பி வைக்கப்பட்டமைக்கும் நன்றி.
இந்தியாவை எப்போதும் ஒரு அண்டை வீட்டாராக உங்களுக்கு தெரியும். எங்கள் நாட்டுக்கு அடுத்த பெரிய சகோதரர் எங்களுக்கு உதவுகிறார். நெருக்கடிக்கு மத்தியில் இருக்கும் எங்களுக்கு உதவும் இந்திய அரசாங்கத்துக்கும், பிரதமருக்கும் (மோடி) நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் இந்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி உள்ளவராக இருக்கிறோம்.
எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு உள்ளது. சில நேரங்களில் 10 முதல் 12 மணி நேரம் மின்சாரம் இல்லை. இலங்கை மக்களுக்கு இது மிகவும் கடினமான சூழ்நிலையாகும். இதனால் தான் மக்கள் வெளியே வந்து போராடுகிறார்கள். நிலைமையை சரியாக கையாளாவிட்டால் பேரழிவு ஏற்படும்.
இந்த விடயங்கள் நடப்பதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. டீசல், எரிவாயு மற்றும் பால்மாவுக்கு 3 முதல் 4 கி.மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன.இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
