தொடர் நெருக்கடிகளை சந்திக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்

SriLankan Airlines Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka
By Sheron Dec 20, 2023 03:39 PM GMT
Report

சமீப காலமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பல்வேறு பிரச்சினைகளால் பல நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி அண்மித்த காலத்தில் இது தொடர்பில் சுமார் 17 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கட்டுநாயக்கவிலிருந்து பிரான்ஸின் பாரிஸில் உள்ள Charles de Gaulle விமான நிலையத்திற்கு பயணித்த விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் மீண்டும் நாட்டிற்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளது.

UL 563 எனும் A 330 வகை விமானம் தொடர்ந்தும் Charles de Gaulle சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர் நெருக்கடிகளை சந்திக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் | Srilankan Airlines Is Facing Crises

தொழில்நுட்பக் கோளாறினால் தற்போது இயங்காமல் இருக்கும் இலங்கை விமானங்களின் எண்ணிக்கை 9 ஆகும். இவற்றில் 5 விமானங்கள் தேவையான கருவிகள் இல்லாமையால் இதுவரை சேவையில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

வெளியேறிய தொழில்நுட்ப வல்லுநர்கள்

தற்போது இரண்டு விமானங்களின் பராமரிப்பு பணிகள் இடம்பெற்று வருவதாக விமான சேவை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றுக்கு ஊழியர்களின் பற்றாக்குறை பாரிய தடையாக இருப்பதாக, விமானப் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான விமானத்தின் பராமரிப்பு பணிகளையேனும் ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை 2022 ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 138 அனுபவம் வாய்ந்த விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் குறித்த சேவைப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர் நெருக்கடிகளை சந்திக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் | Srilankan Airlines Is Facing Crises

முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்க தீர்மானம்

இவர்களில் பெரும்பாலானோர் பதவி விலகியுள்ளதுடன், சிலர் பதவி உயர்வும் சிலர் ஓய்வும் பெற்றுள்ளனர். விமான சேவை சந்தையில் நிலவும் தேவை மற்றும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, பதவி விலகிய பெரும்பாலானோர் ஏனைய விமான நிறுவனங்களில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 475 விமான தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுகின்றபோதிலும், தற்போது 380 விமான தொழில்நுட்ப வல்லுநர்களே உள்ளனர்.

இலங்கைக்கு பெருந்தொகை டொலர்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

இலங்கைக்கு பெருந்தொகை டொலர்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு


அவர்களில் அனுபவம் வாய்ந்த வல்லுனர்களின் எண்ணிக்கை 280 ஆகும். இதனிடையே, 160 பேரில் 40 பேர் கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உரிமம் பெற்ற விமானப் பொறியியலாளர்கள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் தேசிய விமான நிறுவனம் முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்க முன்மொழியப்பட்டிருந்த போதிலும், இதுவரை அதற்கான செயற்பாடுகள் ஏதும் நிறைவுபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US