சிக்கலில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் - பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
லண்டனிலிருந்து 4 ஆம் திகதி புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 504 இல் பயணித்த பயணிகள் பல சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானம், 5 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில்,விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகமானோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், அதன் விளைவாக, சில பயணிகளால் இருக்கைகள் இல்லாமல் ஹீத்ரோவிலிருந்து கட்டுநாயக்கவிற்கு பயணிக்க முடியவில்லை என்றும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடிகள்
சில பயணிகளை 4 ஆம் திகதி விமானத்தில் ஏற வேண்டாம் என்றும், 5 ஆம் திகதி பயணிக்குமாறும் அவர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படும் என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்திருந்ததாக பயணிகள் கூறியுள்ளனர்.
பயணிகள் தாங்கள் பதிவு செய்த உணவிற்குப் பதிலாக வேறு உணவு வழங்கப்பட்டதாகவும் பல சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இது தொடர்பாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெருநிறுவன தகவல் தொடர்பு தலைவர் தீபால் பெரேரா விளக்கமளிக்கையில்,
''வழக்கமாக, எந்தவொரு விமானத்திலும் அளவுக்கு அதிகமாக முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் அல்லது இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். அத்தகைய நேரங்களில், நாங்கள் அந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் அடுத்த நாள் பயணிக்க விரும்பினால், அதற்கான சிறப்பு வசதிகளை வழங்குகிறோம். யாராவது ஏதேனும் காரணத்திற்காக பயணிக்க நேர்ந்தால், நாங்கள் நிச்சயமாக அவர்களை அனுப்பி வைப்போம்.
உணவைப் பொறுத்தவரை, பயணிகளின் தேவைக்கேற்ப மிக உயர்ந்த தரத்தில் நாங்கள் அதை வழங்குகிறோம். ஆனால் ஏதேனும் சிக்கல் இருந்தால், வாடிக்கையாளர் சேவை மையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அவர்களிடம் கூறுகின்றோம்.
பயணிகளுக்கு தண்ணீர் போத்தல் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு, பயணச்சீட்டு எண் மற்றும் விமான எண்ணை குறிப்பிட்டு முறைப்பாடு அளிக்கலாம். அங்கு, நாங்கள் அந்த பயணிகளின் முறைப்பாடுகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri