நெருக்கடியில் இயங்கும் ஸ்ரீலங்கன் விமான சேவை! பெருந்தொகை சம்பளத்துடன் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகர்கள்
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 18 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கன் விமான சேவை வருடாந்தம் பதினான்கு கோடி ரூபா நட்டத்தில் இயங்கி வரும் நிலையில்,இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஒவ்வொரு விமானத்திலும் விமான ஊழியர்கள் சேவைத் தரத்தை மேற்பார்வையிட ஒரு மேலாளர் உள்ள நிலையில்,அவர்களை கண்காணிக்க ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாதாந்தம் பெருந்தொகை சம்பளம்
ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான மாதாந்த சம்பளத்தை பெறும் இந்த ஆலோசகர் முகாமையாளர்கள், பெரும்பாலான நிறுவனத்தின் உயர்மட்ட முகாமையாளர்களுக்கு மருந்துகள் மற்றும் ஏனைய தேவைகளை கொண்டு சேர்ப்பதில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவர்கள் விமான சேவையின் பயணிகள் சேவை பிரிவில் பணிபுரிபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam