பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விடுத்துள்ள அறிவிப்பு
மத்திய கிழக்கு வான்வெளிகள் மூடப்பட்டு, பிராந்திய பதற்றம் அதிகரித்து வருவதால், ஐரோப்பிய விமானப் பாதைகளில் தற்காலிக மாற்றங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
மோதல் மண்டலங்களைத் தவிர்ப்பதற்காக, லண்டன் மற்றும் பாரிஸ் உட்பட ஐரோப்பாவிற்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் மாற்றுப் பாதைகளைப் பின்பற்றும் என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இன்று (13) வெளியிட்ட அதிகார பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸைத் தொடர்பு கொள்ளுமாறு
"இந்த வழித்தட மாற்றங்கள் ஐரோப்பாவிற்கான எங்கள் சேவைகளில் விமான கால அளவை அதிகரிக்க வழிவகுத்தன" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்று வழித்தடத்தின் ஒரு பகுதியாக, லண்டனில் இருந்து கொழும்புக்குச் சென்ற UL504 விமானம் இன்று அதிகாலை எரிபொருள் நிரப்புவதற்காக டோஹாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இதேபோல், கொழும்பிலிருந்து பாரிஸுக்குச் செல்லும் UL501 விமானம் தடைசெய்யப்பட்ட வான்வெளியைத் தவிர்த்து திருப்பி விடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மாற்றங்களை விமான நிறுவனம் செயல்படுத்தும்போது பயணிகள் புரிந்துகொண்டு பொறுமையாக இருக்குமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் பயணிகள் பின்வரும் வழிகள் மூலம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்
Hotline(இலங்கைக்குள்): 1979 • சர்வதேசம்: +94 11 777 1979
• வாட்ஸ்அப் (chat only) : +94 74 444 1979
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Super Singer: சூப்பர் சிங்கர் குடும்பத்தின் கடைசி Good Bye... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan
பனிப்புயலில் சிக்கிய பல மாகாணங்கள்... போர்க்களமான சாலைகள்: 35 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri