மருத்துவமனைகளுக்கு விமானத்தில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கல்: ஸ்ரீலங்கன் கேர்ஸ்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சமூகப் பொறுப்புணர்வுப் பிரிவான ஸ்ரீலங்கன் கேர்ஸ், சர்வதேச ரீதியில் நன்கொடையாக வழங்கப்படும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை சரக்குக் கட்டணங்கள் இன்றி இலங்கையில் உள்ள மருத்துவமனைகளுக்கு விமானத்தில் கொண்டு செல்வதற்கான பணியை ஏற்றுக்கொண்டது.
இந்த முயற்சியின் மூலம் நாட்டில் தற்போது நிலவும் மருந்துப் பற்றாக்குறையைச் சமாளிக்க போராடும் மருத்துவமனைகளுக்கும், உயிர்காக்கும் மருந்துகளை நம்பியிருக்கும் நோயாளிகளுக்கும் உரிய நேரத்தில் நிவாரணம் வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக நாடுகளில் இருந்து வழங்கப்படும் மருந்து பொருட்கள்

இதன் விளைவாக, பிரான்ஸ், இந்தோனேசியா, ஐக்கிய இராச்சியம், மலேசியா, குவைத், மற்றும் நேபாளம் உட்பட உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் நலம் விரும்பிகளால் தாராளமாக நன்கொடையாக வழங்கப்பட்ட அவசரகால மருத்துவப் பொருட்களை ஸ்ரீலங்கன் கேர்ஸ் தொடர்ந்து விமானத்தில் உரிய இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான பணியை முன்னெடுத்துள்ளது,
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உபசாரத்தின் மூலம் மருத்துவப் பொருட்கள் சரக்குக் கட்டணமின்றி குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை போன்ற மருத்துவ நிறுவனங்களுக்கு தொடர்ந்து விநியோகிக்கப்படும்.
நெருக்கடிநிலையில் சுகாதாரத்துறை

ஸ்ரீலங்கன் கேர்ஸ், தேவையான ஆவணங்கள் மற்றும் ஒப்புதல்களைப் பெற்று, செயல்முறையை விரைவாகக் கண்காணிக்க உதவும் பல்வேறு மூலங்களிலிருந்து சரக்குகளின் தளவாடங்களை ஒழுங்கமைப்பதன் மூலம் இத் திட்டத்தை எளிதாக்கியுள்ளது.
இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்புத் துறையானது தற்போது நாட்டின் வரலாற்றில் மிகக் கடுமையான மருந்துப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது, அதன் சேவைகளை நம்பியுள்ளவர்களின் வாழ்க்கையையே ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் ஸ்ரீலங்கன் கேர்ஸ் மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு உதவும் சந்தர்ப்பத்தில் இணைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
| நிராகரிக்கப்பட்ட பசளைக்கு பதிலாக புதிய பசளையை வழங்க முடியாது:சீன நிறுவனம் |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri