அரச நிறுவனம் ஒன்றுக்கான, புதிய நிர்வாகியின் சம்பளம் 90 லட்சம் ரூபா!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பிரித்தானிய பிரஜையான ரிச்சர்ட் நட்டலை (Richard Nuttall) நியமிக்கும் தீர்மானத்தை பலரும் விமர்சித்து வருகி்ன்றனர்.
நாடாளுமன்றத்திலும் நேற்று இந்த விடயத்தை ஜேவிபியின் உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியிருந்தார்.
நட்டால் இதற்கு முன்பு 11 ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைன் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்.
இந்தநிலையில் 14 மாதங்களுக்குப் பின்னர் அந்த நிறுவனம் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலேயே இந்த தீர்மானத்தை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எடுத்துள்ளது.
9 மில்லியன் (45ஆயிரம் அமரிக்க டொலர்) மாத சம்பளத்தில் இந்த பிரித்தானிய பொதுமகன், புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள பொது விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச, இதே பதவியில் ஏற்கனவே பணியாற்றியவர் 20,000 அமெரிக்க டொலர்களை மாதச் சம்பளமாகப் பெற்றதாகக் கூறியுள்ளார்.
இந்த பதவிக்காக தகுதியான 20 இலங்கையர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால் எந்தவொரு நேர்காணலும் நடத்தாமல், வெளிநாட்டவரை இந்த பதவிக்கு நியமிக்க அரசாங்கம் முடிவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
73 வயதான நட்டால், 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள நட்டல், ராயல் ஜோர்டானியன் ஏர்லைன்ஸ், கேத்தே பசிபிக் ஏர்வேஸ், பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ், கென்யா ஏர்லைன்ஸ் மற்றும் போலார் ஏர் கார்கோ ஆகியவற்றில் பணியாற்றினார்.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan