இலங்கையை தாக்கிய மோசமான வானிலை! பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தப் பேரழிவுகளால் இதுவரை மொத்தமாக 639 பேர் உயிரிழந்துள்ளதுடன், 203 பேர் காணாமல்போயுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்களின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பாதுகாப்பு மையங்கள்
அனர்த்தங்களின் விளைவாக, 5 ஆயிரத்து 350 வீடுகள் முழுமையாகவும், 86 ஆயிரத்து 882 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைப்பதற்காக நாடு முழுவதும் 878 பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் மொத்தமாக 27 ஆயிரத்து 145 குடும்பங்களைச் சேர்ந்த 86 ஆயிரத்து 40 பேர் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் பதிவாகிய உயிரிழப்புகள்
கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 234 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு 1,568 வீடுகள் முழுமையாகவும், 14 ஆயிரத்து 111 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு மையங்களில் 27 ஆயிரத்து 227 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதிக உயிரிழப்புகள் பதிவான பிற மாவட்டங்களாகப் பதுளை (90 பேர்), நுவரெலியா (89 பேர்), குருநாகல் (61 பேர்) மற்றும் புத்தளம் (37 பேர்) ஆகியவை உள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri