மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (VIDEO)
மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் அடை மழை பெய்து வருகின்றது.
நீர் தேங்கும் பிரதேசங்களில் பதிவாகி வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நேற்றைய தினம் கெனியோன் நீர்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் சுமார் 6 அங்குலம் வரை திறந்து விடப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நோட்டன்பிரிஜ் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் அனைத்திலும் நீர் வான் பாய்ந்துள்ளன.

இந்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையினால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண் சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன.
இந்த மண் சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மே 1 உழைப்பாளர் தினத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் Cineulagam
ஜெலென்ஸ்கியை வறுத்தெடுத்தது போல் நடக்கலாம்: சார்லஸ் மன்னர் - ட்ரம்ப் சந்திப்பில் எழுந்த அச்சம் News Lankasri