வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் - வெளியான தகவல்
வாகன இறக்குமதி தொடர்பான வரி முறைகளை அரசாங்கம் மாற்ற வாய்ப்புள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வாகன இறக்குமதி தொடர்பான தற்போது நிலவும் பிரச்சினைக்குரிய சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்படலாமென கூறப்படுகின்றது.
இந்த வரி திருத்தம் சந்தையில் வாகன விலைகளில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தற்போது, மூன்றாம் தரப்பு கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட கிட்டத்தட்ட ஆயிரம் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவை
இது தொடர்பான பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் விளைவாக, அரசாங்கத்திற்கும் இறக்குமதியாளர்களுக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
மூன்றாம் தரப்பு கடன் கடிதங்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெறுவதன் அடிப்படையிலும், சுங்கச்சாவடிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதற்கான வழக்குகளில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் எதிர்காலத்தில் வாகன இறக்குமதி தொடர்பான வரி முறையில் மாற்றம் ஏற்படலமென இறக்குமதியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
