பொலிஸாரின் விஷேட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பில் மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் பன்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பிலே, கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நொச்சிகுளம், சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மொரவெவ
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.