சர்வதேச நாணய நிதியம் பக்கம் திரும்பும் அரசாங்கம்!நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
பொருளாதார சிக்கல்களிலிருந்து மீளும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை தொழில்நுட்ப ஆதரவை கோரியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், அதற்கிணங்க நிபுணத்துவ குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும் திட்டம் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாங்கள் அதிகாரபூர்வமாக எதையும் செய்யவில்லை. அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம். அவர்களிடமிருந்து நிபுணத்துவ ஆலோசனையைப் பெறவுள்ளோம்.
சர்வதேச நாணய நிதியம் என்பது நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கும் நாடுகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஒரு சர்வதேச நிறுவனம் ஆகும். அந்நிறுவனம் எங்களுக்குத் தெரியாத விடயங்களைப் பற்றி ஆலோசனை வழங்கும்.
நாம் அதனை ஏற்றுக்கொள்கிறோமா என்பது வேறு விடயம். நாம் செல்வதற்கு முன், அவர்கள் என்ன கொடுக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வீட்டுக் கடனைப் பெற எந்தவொரு வங்கிக்குச் செல்வதற்கு முன்பும் நாம் அதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam