இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவு! மூடிஸ் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பு இன்னும் குறைவாகவே இருப்பதாக "மூடிஸ்" முதலீட்டாளர்கள் சேவை தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம் , "மூடிஸ்", செப்டம்பர் 10ஆம் திகதி அன்று, இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்பு நிலை பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2021, ஆகஸ்ட் இறுதியில் இலங்கையின் அந்நிய செலவாணி இருப்பு, 3 பில்லியன் டொலர்களாக இருந்தது, இது இந்த ஆண்டின் தொடக்கத்தை விட 43% குறைவானதாகும்.
அத்துடன் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது சுமார் 600 மில்லியன் டொலர் குறைவானது என்று "மூடிஸ்" குறிப்பிட்டுள்ளது
இந்தநிலையில், 2025 வரை அரசாங்கத்தின் வருடாந்த வெளிநாட்டு கடன் திருப்பிச் செலுத்துகை குறைந்தது 4 முதல் 5 பில்லியன் டொலர்கள் என "மூடிஸ்" குறிப்பிட்டுள்ளது.
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறையும் என்றும் "மூடிஸ்" தெரிவித்துள்ளது.
சர்வதேச சுற்றுலா மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு மூலம் கடன் அல்லாத வரவுகள் விரைவாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள், அரசாங்கத்தின் வரிச்சலுகை மற்றும் தற்போதைய முடக்கல் காரணமாக, மேலும் கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் "மூடிஸ்' முதலீட்டாளர்கள் சேவை தெரிவித்துள்ளது.
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri