இந்தியாவுக்கான சந்தையை திறக்க இலங்கை தயாராக உள்ளது : இந்தியாவில் அநுர
இலங்கை(Sri lanka), வணிகங்களுக்கு உகந்ததாகவும் திறமையானதுமான நாடாக மாறும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா-இலங்கை வணிக மன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான சந்தையைத் திறக்க இலங்கை தயாராக உள்ளது என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம்
இலங்கை சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பில், எதிர்வரும் ஆண்டுகளில் புதிய அரசாங்கம் முன்னுரிமைகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், குறிப்பாக சூரிய மற்றும் காற்றாலைத் துறைகளில் இந்தியாவின் முதலீட்டை இலங்கை வரவேற்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப துறையில், இந்தியாவின் வலிமையைப் பற்றிப் பேசிய அவர், இலங்கையின் தொழில்நுட்ப துறையில் இந்திய முதலீட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையில் இலங்கைக்கு சிறப்பு இடம் உண்டு என்றும், இந்தியா இலங்கையுடன் தோளோடு தோள் சேர்ந்து செயல்படும் என்றும் இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
