தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் சாணக்கியன் இல்லை
தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டத்தில் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவை(Mavai senathirajah) சாணக்கியன் விமர்சித்தமையானது ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழரசுக்கட்சியின்(ITAK) மத்தியகுழுவில் 2019ஆம் ஆண்டிற்கு பிறகு இன்றுவரை புதிதாக யாரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
சாணக்கியன் 2020ஆம் ஆண்டளவில் நாடாளுமன்ற உறுப்பினராக அந்தக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை உத்தியோகபூர்வமாக இணைத்துக்கொள்ளப்படவில்லை.
எனவே மற்றுமொரு மத்தியகுழு நியமிக்கப்படும் வரை ஏற்கனவே குழுவிலுள்ள 42 பேருக்கும் பார்வையாளராக இருக்கும் 10 பேருக்குமே மட்டுமே கருத்து சுதந்திரமும் வாக்கெடுப்பு உரிமையையும் உள்ளது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |