மேட்டுக்குடி சதியால் பாட்டாளி வர்க்க போராட்டம் தோல்வியுற்றது! டிலான் பெரேரா
கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பொதுஜன பெரமுண கட்சியின் மறுசீரமைப்புக் குழுவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் காலிமுகத்திடல் போராட்டம் பாட்டாளி வர்க்க இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது.

சூழ்ச்சிகளால் தோற்கடிக்கப்பட்ட போராட்டம்
ஆனால் ரணில் விக்ரமசிங்க மற்றும் பசில் ராஜபக்ச போன்ற மேட்டுக்குடி அரசியல்வாதிகளால் அந்தப் போராட்டம் சதி மற்றும் சூழ்ச்சிகளால் தோற்கடிக்கப்பட்டது.
பிரதமர் பதவியில் இருந்த மஹிந்த விலகியவுடன் பசிலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து இருந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக கோட்டாபய தொடர்ந்தும் இருந்திருப்பார்.
சர்வ கட்சி அரசாங்கமொன்றையும் அமைத்திருக்க முடியும்.
அப்படிச் செய்திருந்தால் ரணில் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வந்திருக்க முடியாது போயிருக்கும்
மே 09 மஹிந்தவும், ஜூன் 09 பசிலும், ஜூலை 09 கோட்டாபயவும் வீடு செல்லக் காரணமாக இருந்த போராட்டம் கடைசியில் காட்டிக் கொடுப்புகளால் ஆகஸ்ட் 09 முடிவுக்கு வந்துவிட்டது. அதுகுறித்து மிகப் பெரும் மனவருத்தம் உள்ளது என்றும் டிலான் பெரேரா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri