ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ஆசனத்தில் அமர்ந்த இரண்டு பெண்கள் கைது
ஜனாதிபதிக்குரிய உத்தியோகபூர்வ ஆசனத்தில் அமர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 49, 55 வயதுடையவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
மொரட்டுவைப் பிரதேசத்தில் இருவரும் இணைந்து வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடரப்பட்ட வழக்கு

கடந்த ஜூலை 09ம் திகதி ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்டதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் பரவிய புகைப்படங்களைக் கொண்டு இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையில் அத்துமீறி நுழைந்தமை, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்கள் இரண்டு பேரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
| இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு அவசர அறிவுறுத்தல் |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri