ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் வெளியிட்டுள்ள தகவல்
ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்வைக்கப்படுகின்ற நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கான புறச்சூழல்கள் உருவாக்கி, குறித்த விவகாரம் நியாயமாக அணுகப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று கருத்துக்களை பரிமாறிய போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்விடயம் தொடர்பாக அடுத்த அமைச்சரவை கூட்டத்திலும் பிரஸ்தாபிக்க இருப்பதாகவும், ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு மக்களினால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளும்,எதிர்பார்ப்புக்களும் நியாயமான முறையில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டையும் பதில் ஜனாதிபதிக்கு எடுத்துரைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan