கோட்டாபயவுக்கும் ரணிலுக்கும் விதிக்கப்பட்ட காலக்கெடு: விடுக்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தமது பதவிகளை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாளை (13) பிற்பகல் 1.00 மணிக்கு முன்னதாக ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களை ஒன்று கூடுமாறு அழைப்பு
இந்நிலையில்,காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நடிகை சமனலி பொன்சேகா தனது முகநூல் பக்கத்தில், ஜனாதிபதி மற்றும் பிரதமரை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை ஜனாதிபதி செயலகத்தில் பொதுமக்களை ஒன்று கூடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தில் நேற்றையதினம் கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அதனை சபாநாயகர் நாளைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் - அம்பலப்படுத்திய சர்வதேச ஊடகம் |