கோட்டாபய தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி குறித்து விமானப்படையின் அறிக்கை
கோட்டாபய ராஜபக்ச, விமானப்படை தளபதிக்கு சொந்தமான தனிப்பட்ட வீட்டில் இருப்பதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் குரல் பதிவு தொடர்பாக விமானப்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவுக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருப்பதாக சமூக ஊடகங்களில் குரல் பதிவு பகிரப்பட்டு வருகிறது.
இலங்கை பொலிஸ் துறை அரசியல்மயப்படுத்தலில் இருந்து மீட்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் முன்னாள் பொலிஸ் அதிகாரியான அஜித் தர்மபால என்பவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் இந்த குரல் பதிவில் எந்த உண்மையும் இல்லை.
இது விமானப்படை மற்றும் விமானப்படை தளபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை.
அத்துடன் விமானப்படை தொடர்பில் பொது மக்களுக்கு கோபத்தையும் ஆத்திரத்தையும் தூண்டும் குறுகிய சந்தர்ப்பவாத நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக வெளியிடப்படும் திரிப்படுத்தப்பட்ட செய்தி எனவும் விமானப்படை கூறியுள்ளது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
