உலக சர்வாதிகாரிகளின் பட்டியலில் இடம்பிடித்த கோட்டாபய ராஜபக்ச! அனுரகுமார தகவல்
உலகின் ஏனைய சர்வாதிகாரிகளின் தலைவிதியைப் போன்று நாட்டிலிருந்து தப்பிச்செல்ல வேண்டிய நிலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் விருப்பத்திற்கு பணிந்து, தலைமறைவாக இருந்து தனது அதிகாரத்தை பாதுகாக்க முயன்ற கோட்டாபய ராஜபக்சவிற்கு உலகின் ஏனைய சர்வாதிகாரிகளின் தலைவிதியைப் போன்று தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவேண்டும்
கோட்டாபய ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கவும் அதிகாரத்தை துறப்பதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடாததால், அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
30 நாட்களில் இவரே ஜனாதிபதி! மகிந்த யாப்பா ஜனாதிபதி அல்ல |
இந்த ஜனநாயகப் பொதுப் போராட்டத்தின் உண்மையான சாராம்சத்தைப் புரிந்துகொண்டு, கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை நாட்டிலிருந்து மீட்டெடுக்கவும், நியாயமான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவும் வெற்றியை நோக்கி அதனை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியினையும் மேற்கொண்டுள்ளேன்.
இந்த ஊழல் ஆட்சியை ஒழிக்க நாடு முழுவதும் உள்ள மக்களும், பல்வேறு அமைப்புகளும் பெரும் பங்களிப்பை வழங்கினர், அதற்காக இலக்குக் களப்போராளிகள் பெரும் தியாகங்களைச் செய்தார்கள், அவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார். தெரிவித்தனர்.