போராட்டக்களமாக மாறிய இலங்கை: ஜனாதிபதி செயலகத்தின் தற்போதைய நிலை
கோட்டாபய - ரணில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுமுழுதாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்நிலையில்,விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னிடம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக குவிந்துள்ள ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சற்று அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.