உக்ரைனில் எறிகனை தாக்குதல் இலங்கையில் விலை தாக்குதல்! நாள்தோறும் கேட்க தயாராகும் இலங்கை மக்கள்!
இலங்கையில் பொருட்களின் விலையுயர்வு செய்திகளை இனி பொதுமக்கள் நாள்தோறும் கேட்கக்கூடியதாக இருக்கும்.
இதன்படி இன்று முதல் பால்மா 400 கிராம் பொதியின் விலை 540ரூபாவில் இருந்து 790ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஒரு கிலோ பால்மா பொதியின் விலையை 1345 ரூபாவில் இருந்து 1945 ரூபாவாக, அதாவது 600 ரூபாவால் அதிகரிப்பதற்கான முன்மொழிவை இறக்குமதியாளர்கள் முன்வைத்துள்ளனர்.
இது பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை மின்சக்தி அமைச்சகம் நாளை திங்கட்கிழமை சமர்ப்பிக்க உள்ளது.
90 அலகுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு சலுகை அளிக்கப்படும் என்றும், 90 அலகுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டணத்தில் அதிகரிப்பு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், லிட்ரோ எரிவாயு லங்கா லிமிடெட், நட்டத்தை ஈடுசெய்ய குறைந்தபட்சம், 12.5 கிலோ வீட்டு எரிவாயு கொள்கலன் விலையை 2,000 ரூபாவினால் அதிகரிக்க முன்மொழிந்துள்ளனர்.
அது ஏற்றுக்கொள்ளப்பட்டால், தற்போதைய விலை 2,675 ரூபாவாக உள்ள நிலையில்,புதிய விலையாக 4,675 ரூபா நடைமுறைக்கு வரும்.
இவையாவும் டொலர் பற்றாக்குறையால் வந்த வினைகள் என்று அரசாங்கம் கூறுகிறது.





இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
