மூன்று மாதங்களில் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழில்சாலை இயங்கும் :இராஜாங்க அமைச்சர் உறுதி (video)
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்காத நிலையில் உள்ள ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழில்சாலையை, இன்னும் மூன்று மாதங்களில் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக சிறு தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழில்சாலையினை நேற்று (23.12.2022) சிறு தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, கிராமிய அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.குணபாலன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், கிராம அலுவலகர்கள் உள்ளிட்ட பலர் சென்று பார்வையிட்டுள்ளார்கள்.
இதன் பின்னர் இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
30 ஆண்டு தொழிற்படாத ஆலை
30 ஆண்டுகளாக வேலை செய்யமால் உள்ள இதனை மூன்று மாதங்களில் திறந்து வைக்க அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளேன்.
நாட்டில் தற்போது ஓடு 200 ரூபாவிற்கு விற்பனையாகின்றது. இத் தொழிற்சாலையினைத் திறந்து வைப்பதன் மூலம் ஓட்டினை 100 ரூபாய்க்கு விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு
தொழில்சாலையினை திறந்துவைப்பதற்காக அடுத்த முறை நான் வருவேன். இங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு இதன் மூலமாக வேலை கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படப் போவதில்லை என்றும் இங்குள்ளவர்களுக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் க.திலீபன் சில விடயங்களையும் தெரியப்படுத்தியுள்ளார். நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபையிலும் வெளிமாவட்டவர்களே வேலை செய்கின்றார்கள் என்று இதன்போது தெரியப்படுத்தியுள்ளார்.
அது முதல் அமைச்சுக்களின் போது செய்யப்பட்ட வேலை, ஆனால் எங்கள் அமைச்சுக்களில் இங்குள்ளவர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்கும் எனத் தெரியப்படுத்தியுள்ளார்.
மூன்று மாதத்திற்குள் நடைமுறை
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன் உறுப்பினர் க.திலீபன், கடந்த காலங்களில் எந்த இராஜாங்க அமைச்சர் நியமிக்கப்பட்டாலும் ஓட்டுத்தொழில்சாலைக்குத்தான் வருவார்கள் அவர்கள் வந்து பார்வையிட்டுள்ளதாக செய்தி வரும் எந்த வேலையும் நடந்தாக இல்லை என்பதனை நான் இராஜாங்க அமைச்சருக்கு இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.
விரைவாக மூன்று மாதகாலத்திற்குள் இதனை தான் நடைமுறைப்படுத்தி தருவதாக எனக்கு
வாக்குறுதியளித்துள்ளார் என்றும் இதன்போது தெரிவித்துள்ளார்.





புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

கூலி பட நடிகர் உபேந்திரா மற்றும் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் Cineulagam
