இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு சிறந்த வெளியுறவு சேவை அவசியம் - ஜனாதிபதி

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan political crisis
By Kamel Jan 06, 2023 08:28 PM GMT
Report

இலங்கையின் இறையாண்மையைப் பேணிக்காக்கும் வகையில் சிறந்த வெளியுறவுச் சேவையின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தூதரக சேவைக்காக செல்லும் புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் 11 பேரை நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஏனைய வெளிநாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு சிறந்த வெளியுறவு சேவை அவசியம் - ஜனாதிபதி | Srilanka Political Crisis Ranil Wickramasingha

அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்கள்

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

முதலில் சிறந்த வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருப்பதும் இரண்டாவதாக நட்புறவைக் கட்டியெழுப்புவதும் தான் நமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

பொருளாதாரத் திட்டமிடல், பாதுகாப்பு நோக்கங்கள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை நாம் நிறைவு செய்ய வேண்டும்.

இந்த நோக்கங்களை அடைவது, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திர பிரதானிகளின் செயல்திறனிலே தங்கியுள்ளது. வெளிநாடுகளுடன் உறவுகளை வளர்த்து, அங்குள்ள இலங்கையர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் எமது பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்.

இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு சிறந்த வெளியுறவு சேவை அவசியம் - ஜனாதிபதி | Srilanka Political Crisis Ranil Wickramasingha

புலம்பெயர்ந்தோரின் அரசியல் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக இலங்கையில் புலம்பெயர்ந்தோர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதில் அவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய முடியும்.

2030 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மற்றும் வெளிநாட்டு சேவை தொடர்பான வரைவை வெளிவிவகார அமைச்சு தயாரித்து வருகிறது. அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தையும் பாராளுமன்றத்தின் ஒப்புதலையும் பெற எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தகம் தொடர்பான பிரச்சினை

வர்த்தகத் திணைக்களத்திற்குப் பதிலாக சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றை இலங்கையில் நிறுவுவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். இது பல துறைகளில் காணப்படும் வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து நமது பொருளாதாரத்திற்கு பலன்களை பெற்றுத்தரும்.

எனவே, இந்த செயல்பாட்டில் சர்வதேச வர்த்தக அலுவலகம் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் நம்புகிறேன். சம்பந்தப்பட்ட நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவது, முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது, சுற்றுலாவை மேம்படுத்துவது, விவசாய வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவது, பயிற்சிக்கான இடம்பெயர்வு, கல்வி மற்றும் கடல்சார் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்தும் இதன்போது ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் சித்ராங்கனி வாகேஸ்வர, பிரான்ஸிற்கான தூதுவராக நியமிக்கப்பட்ட மனீஷா குணசேகர, பஹ்ரைனுக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட எச்.எம்.ஜி.ஆர்.கே. விஜேரத்ன மெண்டிஸ், வியட்நாம் தூதுவராக நியமிக்கப்பட்ட கலாநிதி ஏ.எஸ்.யு. மெண்டிஸ், ஜேர்மனிக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வருணி முத்துக்குமாரண, லெபனானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கபில ஜயவீர, இஸ்ரேலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எச்.எம்.என். பண்டார, இத்தியோப்பியாவின் தூதுவராக நியமிக்கப்பட்ட கே.கே.டி. குமாரசிறி, ஜோர்தானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கிகா விஜேகுணசேகர, பிலிப்பைன்ஸிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சானக எச். தல்பஹேவா, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள உதய இந்திரரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, சர்வதேச உறவுகள் தொடர்பான ஜனாதிபதியின் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, நிலைபேரான அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் பணிப்பாளர் ரந்துல அபேவீர உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US