ரணில் பெரமுனவின் வேட்பாளர் இல்லை: திட்டவட்டமாக மறுக்கும் மகிந்த
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க களமிறங்கவுள்ளார் என்று வெளியான கருத்துக்களை பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்னமும் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை.
தேர்தல் அறிவிப்பு வெளிவராத நிலையில் அது தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது பயனற்றது.
உண்மைக்குப் புறம்பானவை
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பெரமுனவின் நிலைப்பாடாக சிலர் வெளியில் தெரிவிக்கும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பெரமுனவின் பொதுவேட்பாளராக ரணில் விக்ரமசிங்க
களமிறங்கவுள்ளார் என்று அமைச்சர்கள் சிலர் வெளியிட்டுள்ள கருத்துக்கள்
பெரமுனவின் நிலைப்பாடு அல்ல.
பெரமுனவின் தலைவரான என்னால் வெளியிடப்படாத கருத்துக்களைக் கட்சியின் கருத்து என்றோ அல்லது எனது கருத்து என்றோ எவரும் கொள்ள வேண்டாம் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam
