புதிய அரசியல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ள பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள்! கட்சிக்குள் கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட புல்லர்ஸ் வீதியிலுள்ள அரசாங்க இல்லம் தற்போது பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் நிமல் லான்சா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அரசியல் முன்னணியொன்றை உருவாக்குவதற்கு தேவையான ஆவணங்களை தயாரிக்கும் நடவடிக்கைகள் இந்த இல்லத்திலிருந்தே நடைமுறைபடுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
கடும் எதிர்ப்பு
அதன்படி இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆளும் கட்சி கூட்டத்திற்கு பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கு குறித்த வீட்டிலிருந்தே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |