எமது அமைச்சுப் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்குங்கள் : நாமல் சீற்றம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நாம் அமைச்சுப் பதவிகளைக் கேட்கவில்லை, அந்த அமைச்சுக்களை ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களுக்கு வழங்கி அரசைப் பலப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், எமக்கு அமைச்சுக்கள் வேண்டாம் என்று நாம் எப்போதோ கூறிவிட்டோம்.
அமைச்சுப் பதவி
மொட்டுக் கட்சியினர் அமைச்சரவையில் இருப்பதால்தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து யாரும் வருவதில்லை என்று கூறுகின்றார்கள்.
எமது அமைச்சுப் பதவிகளை அவர்களுக்குக் கொடுத்து அரசைப் பலப்படுத்துங்கள் என்று நாம் அப்போதே சொல்லிவிட்டோம். நாங்கள் அதற்கு ஆதரவு வழங்குகின்றோம் என்றும் கூறிவிட்டோம்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 10 பேர் வருகின்றார்கள், 20 பேர் வருகின்றார்கள், 40 பேர் வருகின்றார்கள் என்று ஒரு வருடமாகச் சொல்கிறார்கள் சொல்கின்றார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
