அரசாங்க செலவீனங்கள் தொடர்பில் திருத்தப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
இதன்படி, பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளின் செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
2022 வரவு செலவுத்திட்டத்தில் செலவீனங்களுக்கான 2.78 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 3 பில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை விபரம்
பாதுகாப்புக்காக 375 பில்லியன்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,தற்போது அந்த துறைக்கு 373 பில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
சுகாதாரத்துக்காக 348 பில்லியன்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு 153.5 பில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில்,கல்விக்காக ஏற்கனவே 127 பில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 200 பில்லியன் ரூபாய்களாக உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும், ஒதுக்கீட்டுக் கணக்கின்படி பொது நிர்வாகத்திற்கான தொடர்ச்சியான செலவீனங்களுக்காக 682, 728,000,000 ரூபா என்ற பாரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,பொது பாதுகாப்பு அமைச்சுக்காக 212,808,260 000 ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
