சிகரட்டின் விலையும் உயர்ந்தது! புதிய வரவு செலவுத்திட்டத்தில் சேர்த்த பசில்
சிகரட்டின் விலை 5 ரூபாவால் அதிகாிக்கப்படுவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் 2ஆவது வரவு செலவுத்திட்டம், இன்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்த வரவுசெலவுத்திட்டத்தை சமா்ப்பித்து உரையாற்றியிருந்தார். இதன்போது அவரால் யோசனைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அவர் முன்வைத்த யோசனைகள் அவற்றில் வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் வாகன குத்தகை நிறுவனங்களின் பெறுமதிசோ் வாி 15வீதத்தில் இருந்து 18ஆக அதிகாிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
இரண்டு வருடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை! 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விபரம் இதோ
