இரண்டு வருடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை! 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விபரம் இதோ (Video)

Parliament Budget Basil Rajapaksha
By Benat Nov 12, 2021 11:54 AM GMT
Report
புதிய இணைப்பு

அரச செலவீனங்களை குறைப்பற்காக புதிய அரச அலுவலங்கள் அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் 2ஆவது வரவு செலவுத்திட்டம், இன்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்த வரவுசெலவுத்திட்டத்தை சமா்ப்பித்து உரையாற்றியிருந்தார்.

இதன்போது அவரால் யோசனைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் அவர் முன்வைத்த யோசனைகள் இதோ,


1) அரச செலவீனங்களை குறைப்பற்காக புதிய அரச அலுவலங்கள் அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு தடை

2) மின்சாரத் தேவையை சூாிய சக்தியை பெற்றுக்கொள்ளவும், அரச அலுவலங்களின் தொலைபேசி பாவைனையை 25 வீதம் குறைக்கவும் யோசனை

3) அனைத்து அரச பணியாளா்களின் ஓய்வூதிய முரண்பாடுகள் தீா்க்கப்பட்டு, புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

4) அரச சேவையின் பணியாளா்களது ஓய்வூதிய வயது 65 ஆக உயா்த்தப்படுகிறது.


5) அனைத்து பாடசாலைகளுக்கும் நவீன இணைய வசதிகள் செய்துக்கொடுக்கப்படும்.

6) முச்சக்கர வண்டிகளுக்கான அதிகாரசபை அமைக்கப்படவுள்ளது.

7) ஓய்வூதியம் பெறாத சிரேஸ்ட பிரஜைகளுக்கு ஓய்வூதிய திட்டம். இதற்கான 100 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது

8) புதிய வியாபாரங்களுக்கு 2022 இல் பதிவுக்கட்டணங்கள் அறவிடப்படாது

9) நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஓய்வூதியத் தகுதிக்காலம் 10 வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.

10) சேதனப்பசைளையை ஊக்குவிக்க கிராமசேவகர் மட்டத்தில் திட்டம் முன்னெடுக்கப்படும்.

11) வெளிநாட்டு முதலீடுகளை அதிகாிக்க, நிபந்தனைகளை தளா்த்துவதற்கு திட்டங்கள் விரைந்து முன்னெடுக்கப்படும்.

12 ) வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு செல்வோருக்கான பயிற்சிகள் மேம்படுத்தப்படும் 

13) அரச சேவையாளா்களுக்கான எாிபொருள் 5 லீற்றர்களால் குறைக்கப்படும். மாதாந்த தொலைபேசி கட்டணம் 25வீதத்தினால் குறைக்கப்படும்

 14) கொவிட் காரணமாக வருமானத்தை இழந்த முச்சக்கர வண்டி உாிமையாளருக்கு நிவாரணம் வழங்க 700 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

15) தனியாா் பேரூந்து உாிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

16)  கோவிட்  முடக்க காலத்தில் வருமானத்தை இழந்த பாடசாலை வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிக்க 400 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு

17) வீதி அபிவிருத்திக்காக மேலதிகமாக 20,000 மில்லியன் ஒதுக்கீடு

18)  அனைவருக்கும் குடிநீர் வசதி  24 மணி நேரமும் சுத்தமான குடிநீரை வழங்க 15,000 மில்லியன் ஒதுக்க நடவடிக்கை

19) திரவப்பால் உற்பத்தியை அதிகரிக்க தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக 1000 மில்லியன் ஒதுக்க எதிர்பார்ப்பு

20) புதிய தொழிநுட்பத்துடன் கூடிய பெருந்தோட்டங்களை உருவாக்கும் நோக்கம்

21)  இலங்கையை முதன்மையான இரத்தினக்கற்கள் கொள்வனவு மையமாக மாற்றுவது எமது நோக்கம்

22) ஆடைக் கைத்தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்திய செய்ய நடவடிக்கை

23) மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மீதான சட்டத்தை அறிமுகப்படுத்த முன்மொழிவு

24) வீடு மற்றும் நகர அபிவிருத்திக்காக 2 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு

25) மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

26) சிறைக்கைதிகளின் நலன்களை மேம்படுத்த மேலதிகமாக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

27) கா்ப்பிணி தாய்மார்களுக்கு 24 மாதங்களுக்கான போசனை பொதிகளுக்காக மேலதிகமாக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

28) அரச சேவையாளா்களுக்கான உந்துருளிகள் வழங்கல்களுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

29) ஆசிாியா்கள், அதிபா்களுக்கான வேதன முரண்பாட்டுக் கொடுப்பனவுகளை ஒரே தடவையில் வழங்குவதற்கு 30,000 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு

30) அரச சேவைகளில் பணியாற்றும் பட்டதாாிகளுக்கு 2022 முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படும். அவா்களுக்கான கொடுப்பனவுகளுக்காக 7600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

31) சிகரட்டின் விலை 5 ரூபாவால் அதிகாிக்கப்படுகிறது.

32) 2000 மில்லியன் ரூபாவை வருடாந்தம் வருமானமாக ஈட்டும் நிறுவனங்கள் ஒரு தடவையில் மாத்திரம் 25வீத வாியை செலுத்தவேண்டும்

33) வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் வாகன குத்தகை நிறுவனங்களின் பெறுமதிசோ் வாி 15வீதத்தில் இருந்து 18ஆக அதிகாிக்கப்படுகிறது. 

34) வெவ்வேறு காரணங்களால் காணாமல் போனவா்களின் குடும்பங்களுக்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் உரை


ஏற்றுமதி தொழிற்சாலைகளை மீண்டும் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சௌபாக்கிய நோக்கு திட்டத்தில் அதற்கான பரந்த வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.

கடன் நெருக்கடிக்கு மத்தியிலும் 2 பில்லியன் டொலர் பெறுமதியான சர்வதேச பிணைமுறிகள் இரண்டினை செலுத்தியுள்ளோம்.

2018 ஏப்ரல் 2019 ஜூலை மாதம் வரையில் 15 மாதங்களில் 6.9 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டிய பாரிய சுமை எமக்கு சுமத்தப்பட்டுள்ளது.

வரவு - செலவுத்திட்டத்தின் அதிக செலவு - கடன்களுக்கான வட்டியை செலுத்தவே ஒதுக்கப்பட்டுள்ளது  

சுற்றுலாத்துறை மூலமாக கிடைத்த 5 பில்லியன் ரூபா கிடைக்காது போயுள்ளது , வெளிநாட்டு வேலைவாய்ப்புகளின் மூலமாக கிடைக்க வேண்டிய நிதியும் குறைவடைந்துள்ளது.

உற்பத்திப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமையும், நாட்டில் பொருளாதாரத்தை உற்பத்தி பொருளாதாரத்தின் பக்கம் கொண்டுசெல்லும் வேலைத்திட்டம் அவசியமாகின்றது.

வாழ்வாதார விலைவாசி அதிகரிப்பு சவால்கள், நிலையான தீர்வை பெற்றுகொடுக்க எந்த அரசாங்கத்திற்கும் முடியாமல் போனமையே உண்மையாகும்.

வியாபார மாபியா மற்றும் சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்தும் தரகர்கள் சமூகத்தில் கலந்துள்ளனர். இது குறித்து சகலரும் அவதானமாக இருக்க வேண்டும்.

சர்வதேச போதைப்பொருள் மாபியாக்குள் இலங்கையை சிக்கவைக்கும் முயற்சி இன்றும் பலமாக முன்னெடுக்கப்படுகின்றது. இளைஞர்களே இதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய வலயத்தின் ஏனைய நாடுகளை விடவும் எம்மால் விரைவாக மீட்சி காண முடியும் என்ற நம்பிக்கை எம்மிடத்தில் உள்ளது.

ஆசிய கண்டத்தின் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட நாடாகவே இலங்கையை பலர் அடையாளப்படுத்துகின்றனர்.
  
முதலாம் இணைப்பு

சுதந்திர இலங்கையின் 76ஆவது பாதீட்டு உரை  தற்போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது பாதீடு இதுவாகும். 

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை ஆரம்பமாகி, 7 நாட்களுக்கு இடம்பெறுவதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, நவம்பர் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி நிதி அமைச்சரினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.   இதற்கமைய, அடுத்த ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 4,128 பில்லியனாகும்.

GalleryGallery
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US