பட்டப்பகலில் வீடுடைத்து கொள்ளை : பறிபோனது 13 இலட்சம் பெறுமதியான நகை
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளுவர் புரம் கிராமத்தில் வீடு ஒன்றினை உடைத்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.
இந்த சம்பவம் 19.11.21 அன்று காலை இடம்பெற்றுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பம் பார்த்து கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து வீட்டிற்குள் புகுந்துகொண்டுள்ளார்கள்.
வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 8 மோதிரங்கள், 5 சங்கிலிகள், 2தோடுகள், 3கைச்செயின்கள் என்பனவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்படி கொள்ளைச் சம்பவமானது, கணவன் விவசாய நடவடிக்கைக்கு சென்றுள்ள நிலையிலும் மனைவி பிள்ளையுடன் பாடசாலைக்கு சென்றுள்ள வேளையிலேயே இடம்பெற்றுள்ளது.
இதன்போது சுமார் 13 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளனர்.