நிதியமைச்சினை ஏற்க மறுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! கடும் குழப்பத்தில் கோட்டாபய
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி நிதியமைச்சினை பொறுப்பேற்று 24 மணி நேரத்திற்குள் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியமைச்சராக பதவியேற்க தயங்குவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் முன்வைத்த போராட்டமே இதற்கு காரணம் எனவும், இதனால் நிதியமைச்சு இன்னமும் வெற்றிடமாக இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பட்டியலில் சுயாதீன பொருளாதார நிபுணரை நியமிக்க ஜனாதிபதி அனுமதித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என திரு.சப்ரி அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததாக அறிக்கை கூறுகிறது.
இந்நிலையில் நிதியமைச்சர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலையில் ஜனாதிபதி இது தொடர்பில் மேலும் ஆராய்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நிதி அமைச்சர் மற்றும் குழுவொன்று ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு விஜயம் செய்து இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்ற உதவிகளை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நிதியமைச்சு வெற்றிடமாகவும் உள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
