அமைச்சுக் கடமைகளிலிருந்து விலகியது ஏன்? அமைச்சர் ஒருவர் எடுத்த முடிவு
அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்கவின் நடைமுறைச் சாத்தியமற்ற அணுகுமுறை காரணமாக கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக அமைச்சுக் கடமைகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சு நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தாம் அமைச்சு அமைச்சு பதவியில் இருந்து விலகுவது குறித்து பதிலளித்துள்ள அமைச்சர், அமைச்சின் செயலாளர் தமக்கு இடையூறாக நிற்பதால், மக்களின் நலனுக்காக, தன்னால் பணிகளைச் செய்ய முடியாது போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்த முடியவில்லை. நடைமுறைக்கு மாறான பல்வேறு விதிமுறைகளை மேற்கோள்காட்டி செயலாளர், தம்மை தடுத்து வருகிறார்.
இதனையடுத்தே அமைச்சில் உள்ள தமது பணியாளர்களை, அமைச்சக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டதாக லன்சா குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தாம் இன்னும் தமது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை என்று ராஜாங்க அமைச்சர் லன்சா தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri