இலங்கை மக்களுக்கு ஏற்படப்போகும் மற்றுமொரு ஆபத்து : சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்காக சுகாதார அமைச்சு சுமார் 1 பில்லியன் ரூபா கடனைச் செலுத்த வேண்டியுள்ளதாக சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை சுகாதார அமைச்சுக்கான மருத்துவப் பொருட்களை வழங்குவதை நிறுத்துவதற்கு அந்நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக ஆய்வுகூட சோதனைகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
ஆய்வுகூட சோதனைகளுக்கு பதில் கிடைக்காததால் ஏற்கனவே சில சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதார அமைச்சு சில மருத்துவ
உபகரணங்களை அதிக விலைக்கு கொள்வனவு செய்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு