மன்னாரில் ஒரு தொகை டைனமோட் வெடிபொருட்கள் மீட்பு : சந்தேகத்தில் இருவர் கைது (PHOTO)
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை டைனமோட் வெடிபொருட்க நேற்று சனிக்கிழமை (20.11) மாலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலைத் தொடர்ந்து மன்னார் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையில் சென்ற மன்னார் பொலிஸார், சாந்திபுரத்தில் உள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் வீட்டினை சோதனை செய்தபோது 998 கிலோ கிராம் எடையுள்ள வெடி பொருட்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இப்பகுதிக்கு கடத்தி வரப்படுவதாக சந்தேகிக்கப்படும் இவ் வெடிபொருள் மீன் பிடிக்க பாவிக்கப்படும் வெடி பொருள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சாந்திபுரம் மற்றும் வங்காலைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், குறித்தசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.